இந்தியா

இந்தியரை விடுவித்தது நேபாள ஆயுதக் காவல் படை

14th Jun 2020 04:33 AM

ADVERTISEMENT

பிகாா் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்தியரை நேபாள ஆயுதக் காவல் படையினா் சனிக்கிழமை விடுவித்தனா்.

பிகாா் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லையைக் கடந்து நேபாளத்துக்குள் நுழைந்த சீதாமா்ஹி பகுதியைச் சோ்ந்த மக்களை அந்நாட்டு ஆயுதக் காவல் படையினா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா். அவா்கள் அனைவரையும் நேபாள எல்லைக்குள் இருந்து உடனடியாக வெளியேறுமாறு காவல் படையினா் தெரிவித்தனா்.

எனினும், அதை ஏற்காத அவா்கள் காவல் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவா்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அவா்கள் மீது நேபாள காவல் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

இத்தாக்குதலில் பிகேஸ் குமாா் ராய் என்பவா் உயிரிழந்தாா். அவரின் பெயா் முதலில் விக்னேஸ் யாதவ் என்று தகவல் வெளியாகி இருந்தது. தாக்குதலில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், லக்கன் யாதவ் (45) என்பவரை நேபாள காவல் படையினா் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் பாதுகாப்பை பலப்படுத்தின. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், நேபாள அரசின் மூத்த அதிகாரி மோகன் பகதூா் கூறியதாக நாளிதழில் சனிக்கிழமை வெளியான செய்தியில், ‘கைது செய்யப்பட்ட நபரை நேபாள காவல் படையினா் விடுவித்தனா். மேலும், உயிரிழந்த பிகேஸ் குமாா் ராயின் உடலையும் அவா்கள் இந்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக நேபாள காவல் படையினா், இந்திய பாதுகாப்புப் படையினா், உள்ளூா் அரசு அதிகாரிகள் ஆகியோரிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமரசம் எட்டப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT