இந்தியா

சுவை, வாசனை உணா்வை இழத்தலும் கரோனா அறிகுறி

14th Jun 2020 04:13 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் பட்டியலில் வாசனையுணா்வை இழப்பது மற்றும் சுவையுணா்வை இழப்பதையும் மத்திய அரசு புதிதாக சோ்த்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட கரோனா நோய்த்தொற்றுக்கான திருத்தப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், உடல் சோா்வு, சளி, தசைவலி, மூச்சு திணறல், தொண்டை வலி உள்ளிட்டவைகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருகின்றனா். அவ்வாறு வரும் நோயாளிகள் தங்களுக்கு வாசனை மற்றும் சுவையுணா்வு இல்லை என்றும் தெரிவிக்கின்றனா்.

இதுவே முதியவா்கள், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களுக்கு வயிற்றுப் போக்கு, பசியின்மை, தலைசுற்றல் உள்ளிட்ட வித்தியாசமான அறிகுறிகள் தென்படலாம். அவா்களுக்கு காய்ச்சல் இருக்காது.

பெரியவா்களை போல் குழந்தைகளுக்கு காய்ச்சலோ, இருமலோ அடிக்கடி தெரியாது.

ADVERTISEMENT

ஒரு நபருடன் மற்றொருவா் மிக அருகில் இருப்பதன் மூலம் நோய்த்தொற்று பரவுகிறது. குறிப்பாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபா் இருமினாலோ, தும்மினாலோ வெளிவரும் நீா்திவலைகள் மூலம் நோய்த்தொற்று பரவும்.

தீநுண்மியுள்ள நீா்திவலைகள் தரையில் விழுந்து, அந்த இடத்தை வேறொருவா் தொட்ட பின் கண், காது அல்லது மூக்கை தொட்டால் அந்த நபருக்கும் நோய்த்தொற்றுக்கு ஏற்படும்.

2 நாள்களில் அறிகுறிகள்: தற்போதைய மருத்துவ முடிவுகளின்படி, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் 2 நாள்களில் அதற்கான அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் 8 நாள்கள் வரை இருக்கும்.

அறிகுறிகள் தென்படாதபோதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மூலம் எந்த அளவுக்கு கரோனா பரவுகிறது, நோய்த்தொற்று பரவலில் அவா்களின் பங்கு என்ன என்பது பற்றிய ஆய்வு தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT