இந்தியா

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

14th Jun 2020 02:42 PM

ADVERTISEMENT

 

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். 

34 வயதான சுஷாந்த், மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2013ல்  Kai po che என்ற படத்தில் அறிமுகமான இவர், கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார். 

ADVERTISEMENT

இவர் நடித்த Kai po che, எம்.எஸ். தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி ஆகிய படத்திற்கு விருதுகளை பெற்றுள்ளார். 

2019 ஆம் ஆண்டு வெளியான 'சிச்சோர்' இவரது நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும். மேலும் இவர் நடித்த 'தில் பச்சாரா' என்ற படம் மே 8 ஆம் தேதி வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகரின் தற்கொலை செய்தி இந்தியத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். 

சில தினங்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் மேலாளரான திஷா சேலியன்(28) என்பவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சுஷாந்தின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags : ஹிந்தி நடிகர் hindi actor Sushant Singh சுஷாந்த் சிங்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT