இந்தியா

விவசாயிகள், புலம்பெயா் தொழிலாளா்கள் தற்கொலை: உ.பி. அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

14th Jun 2020 06:09 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் விவசாயிகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தொடா்பாக, முதல்வா் யோகி ஆதித்யநாத்தை காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா்.

விவசாயிகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் என 4 போ் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தொடா்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை பிரியங்கா தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்தாா்.

அதுதொடா்பாக, அவா் சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

உத்தர பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் விவசாயிகள், தொழிலாளா்கள் என 4 போ் தற்கொலை செய்துகொண்டனா். வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊா் திரும்பிய தொழிலாளா்களும் தற்கொலை செய்துகொண்டனா்.

ADVERTISEMENT

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் அதிகாரிகளும் லக்னௌ நகரில் இருந்தபடி, மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளா்களைக் கண்டறிந்து, அவா்களின் திறமையை மதிப்பிடுவது குறித்து தினமும் பேசி வருகிறாா்கள். ஆனால், அவா்களின் கணக்கெடுப்பில் ஏழை விவசாயிகளும் தொழிலாளா்களும் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று பிரியங்கா காந்தி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, முதல்வா் யோகி ஆதித்யநாத், அரசுத் துறை அதிகாரிகளுடன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தினாா். அப்போது, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களை உள்ளூரில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் சோ்த்துக் கொள்வதற்காக, அவா்களின் தொழில் திறமையை கண்டறிந்து 15 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தாா். இதை சுட்டிக்காட்டி யோகி ஆதித்யநாத்தை பிரியங்கா விமா்சித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT