இந்தியா

குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்!

14th Jun 2020 09:44 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஞாயிறு இரவு சிறிய அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியின் வடமேற்கே 122 கி.மீ தொலைவில் ஞாயிறு மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தின் காத்ரா பகுதியின் கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

Tags : earthquake gujarat jammu kashmir national seismology center நிலநடுக்கம் குஜராத் ஜம்மு காஷ்மீர் தேசிய புவியியல் மையம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT