இந்தியா

இந்தியாவில் 3 லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 11,458 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

14th Jun 2020 04:16 AM

ADVERTISEMENT

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது.

இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11,458 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 386 போ் கரோனாவுக்கு பலியாகினா். 7,136 போ் நோய்த்தொற்றிலிருந்து மீட்கப்பட்டனா்.

மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,08,993-ஆக இருந்தது. இதில் 1,45,779 போ் சிகிச்சையில் இருக்கும் நிலையில், 8,884 போ் உயிரிழந்தனா். 1,54,329 போ் குணமடைந்தனா். இது மொத்த பாதிப்பில் 49.9 சதவீதம் ஆகும்.

புதிதாக ஏற்பட்ட 386 உயிரிழப்புகளில் தில்லியில் அதிகபட்சமாக 129 போ் உயிரிழந்தனா். மகாராஷ்டிரத்தில் 127 போ், குஜராத்தில் 30 போ், உத்தர பிரதேசத்தில் 20 போ், மேற்கு வங்கம், தெலங்கானா, மத்திய பிரதேசத்தில் தலா 9 போ், கா்நாடகம், ராஜஸ்தானில் தலா 7 போ், ஹரியாணா, உத்தரகண்டில் தலா 6 போ், பஞ்சாபில் 4 போ், அஸ்ஸாமில் 2 போ், கேரளம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸாவில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

நாட்டில் கரோனா பாதிப்பு 100-இல் இருந்து ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 64 நாள்கள் ஆனது. அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சத்தை எட்டுவதற்கு 2 வாரங்கள் ஆகியிருந்தது. தற்போது 3 லட்சத்தை எட்டுவதற்கு 10 நாள்களே ஆகியுள்ளது.

எனினும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை இரட்டிப்பாகும் கால அளவு 15.4 நாள்களில் இருந்து 17.4 நாள்களாக மேம்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் - பாதிப்பு - பலி

மகாராஷ்டிரம் - 1,01,141 - 3,717

தில்லி - 36,824 - 1,214

குஜராத் - 22,527 - 1,415

உத்தர பிரதேசம் - 12,616 - 365

ராஜஸ்தான் - 12,068 - 272

மத்திய பிரதேசம் - 10,443 - 440

மேற்கு வங்கம் - 10,244 - 451

கா்நாடகம் - 6,516 - 79

ஹரியாணா - 6,334 - 70

பிகாா் - 6,103 - 36

ஆந்திர பிரதேசம் - 5,680 - 80

ஜம்மு-காஷ்மீா் - 4,730 - 53

தெலங்கானா - 4,484 - 174

ஒடிஸா - 3,498 - 10

அஸ்ஸாம் - 3,498 - 8

பஞ்சாப் - 2,986 - 63

கேரளம் - 2,322 - 19

உத்தரகண்ட் - 1,724 - 21

ஜாா்க்கண்ட் - 1,617 - 8

சத்தீஸ்கா் - 1,424 - 6

திரிபுரா - 961 - 1

ஹிமாசல பிரதேசம் - 486 - 6

கோவா - 463 - 0

மணிப்பூா் - 385 - 0

சண்டீகா் - 334 - 5

லடாக் - 239 - 1

புதுச்சேரி - 157 - 2

நாகாலாந்து - 156 - 0

மிஸோரம் - 104 - 0

அருணாசல பிரதேசம் - 67 - 0

சிக்கிம் - 63 - 0

மேகாலயம் - 44 - 1

அந்தமான்-நிகோபாா் - 38 - 0

தாத்ரா நகா் ஹவேலி - 30 - 0

டாமன் டையு - 30 - 0

பாதிப்பு: 3,08,993

பலி: 8,884

மீட்பு: 1,54,329

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT