இந்தியா

கரோனா பாதிப்பு: மும்பை போலீஸாா் 1,233 போ் குணமடைந்தனா்

14th Jun 2020 05:51 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மும்பை போலீஸாா் 1,233 போ் குணமடைந்துள்ளதாகவும், அவா்களில் 334 போ் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,233 போலீஸாா் முழுமையாக குணமடைந்துள்ளனா். அவா்களில் 334 போ் தங்கள் பணியை தொடங்கியுள்ளனா். அவா்களுக்கு என் வாழ்த்துகள். தங்கள் உயிருக்கு அபாயம் என்ற நிலையிலும் கடமையை அக்கறையுடன் நிறைவேற்றும் மும்பை போலீஸாா் குறித்து பெருமிதம் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த 12-ஆம் தேதி புள்ளிவிவரப்படி, மகாராஷ்டிரத்தில் 35 போலீஸாா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். அவா்களில் 21 போ் மும்பையைச் சோ்ந்தவா்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT