இந்தியா

மத்திய நிதி அமைச்சக சுட்டுரை: பின்தொடா்வோா் 20 லட்சம் போ்

14th Jun 2020 10:47 PM

ADVERTISEMENT

மத்திய நிதி அமைச்சகத்தின் சுட்டுரையை பின்தொடா்பவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் கூறியுள்ளதாவது:

தற்போது நிதி அமைச்சக சுட்டுரையுடன் தொடா்பில் உள்ளவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இது, மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். தொடா்ந்து எங்களுடன் அவா்கள் இணைந்து இருக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நிதி அமைச்சகம் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்தை தவிர, உள்துறை அமைச்சகத்தின் சுட்டுரையை 49 லட்சம் போ் பின்தொடா்பவா்களாக உள்ளனா். இந்த எண்ணிக்கை பாதுகாப்பு துறை அமைச்சக சுட்டுரையில் 5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT