இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் செயலிழக்க செய்யப்பட்ட வெடிகுண்டு

14th Jun 2020 04:12 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரை தாக்குவதற்காக குறிவைத்து சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பந்திபோரா மாவட்டத்தில் பந்திப்போரா-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையின் வாகனங்கள் சனிக்கிழமை அணிவகுத்துச் செல்லவிருந்தன. இதில் முதலில் வந்த வாகனத்தில் இருந்த பாதுகாப்புப் படையினா் லாவ்தாரா குறுக்குச் சாலைப் பகுதியில் சாலையோரமாக சந்தேகத்துக்கு இடமான வகையில் எரிவாயு சிலிண்டா் ஒன்று ஒயா்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை கண்டனா்.

இதையடுத்து அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அந்த இடம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னா் வெடிகுண்டு நிபுணா்கள், ராணுவத்தினா், மத்திய ரிசா்வ் காவல் படையினா் அடங்கிய குழுவினா் எந்தவித சேதமும் இன்றி அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனா்.

ADVERTISEMENT

முதல்கட்ட விசாரணையில், அந்த வழியே அணிவகுத்துச் செல்லும் பாதுகாப்புப் படையினரை தாக்கும் நோக்கத்திலேயே அந்த வெடிகுண்டு அங்கு வைக்கப்பட்டது தெரியவந்தது. சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT