இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் ஒருவர் பலி; மேலும் இருவர் படுகாயம்

14th Jun 2020 03:59 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிபோரோ என்ற இடத்தருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதிக்கு சென்றனா்.

தங்கள் இருப்பிடத்தை நோக்கி பாதுகாப்புப் படையினா் வருவதை அறிந்த பயங்கரவாதிகள், அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். 

ADVERTISEMENT

தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும்  இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. 

Tags : Poonch காஷ்மீர் kashmir Loc indian army
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT