இந்தியா

தில்லியில் மேலும் 2,134 போ் பாதிப்பு; 57 போ் உயிரிழப்பு

14th Jun 2020 06:03 AM

ADVERTISEMENT

தேசிய தலைநகா் தில்லியில் மேலும் 2,134 பேருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,958 ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 2-ஆவது நாளாக 2,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 57 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,271 ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 22,742 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 385 பேருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 14,945 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை 2,83,239 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT