இந்தியா

மகாராஷ்டிராவில் கரோனாவால் இன்று மட்டும் 120 பேர் உயிரிழப்பு!

14th Jun 2020 09:21 PM

ADVERTISEMENT

 

மும்பை: மகாராஷ்டிராவில் கரோனாவால் இன்று ஒரே நாளில் மட்டும் 120 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 3,21,963 பேர் கரோனா நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,204 ஆக உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கரோனாவால் இன்று ஒரே நாளில் மட்டும் 120 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை ஞாயிறு மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,390 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கரோனாவால் இன்று மட்டும் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,950 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,958 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : corona virus maharashtra corona count corona update கரோனா வைரஸ் மகாராஷ்டிரா கரோனா நிலவரம் கரோனா பாதிப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT