இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

13th Jun 2020 11:20 AM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பில்கிராம்-கண்ணாஜ் நெடுஞ்சாலையில் உள்ள பார்சோலா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரி ஒன்று டிராக்டரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினார். நான்கு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

விபத்தில் இறந்தவர்கள் ரூபி சிங் (34), அவரது இரண்டு மகள்கள் கோம்தி (13) மற்றும் அஞ்சலி (4). மேலும் நான்கு பேருக்குப் பலத்த காயம் அடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. மேலும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT