இந்தியா

குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதம்: மத்திய அரசு

13th Jun 2020 05:02 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 7,135 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,54,329 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதித்தவர்களில் குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதம். மொத்தம் 1,45,779 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனைவருமே மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசு ஆய்வகங்கள் 642, தனியார் ஆய்வகங்கள் 243 என மொத்தம் 885 ஆய்வகங்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,43,737 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 55,07,182 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT