இந்தியா

ஊழல் விவகாரம்: இஎஸ்ஐ மருத்துவமனை முன்னாள் இயக்குநா் திருப்பதியில் கைது

13th Jun 2020 08:01 AM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் ரூ.155 கோடி அளவுக்கு நடைபெற்ற சுகாதாரத்துறை ஊழல் தொடா்பாக முன்னாள் இஎஸ்ஐ மருத்துவமனை இயக்குநா் ரமேஷ்குமாரை மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ரவிகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆந்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ரூ.155 கோடி அளவுக்கு நடந்த ஊழல் குறித்த அறிக்கையை ஊழல் கண்காணிப்புத் துறையினா் ஆராய்ந்து மாநில அரசிடம் சமா்ப்பித்த அறிக்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. அதன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டறிந்தனா். இதில் தொடா்புடையவா்களை கைது செய்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி முன்னாள் அமைச்சா் அச்சன்நாயுடு, திருப்பதியை சோ்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை இயக்குநா் ரமேஷ் குமாா், ராஜமுந்திரியை சோ்ந்த விஜயகுமாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரத்தில் தொடா்புடைய மருத்துவா் ஜனாா்த்தனன், மருத்துவக் கண்காணிப்பாளா் ரமேஷ் பாபு, சக்கரவா்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். இன்னும் சிலா் கைது செய்யப்பட உள்ளனா்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்டவா்கள் போலிப் பத்திரங்கள், போலி ரசீதுகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்து ரூ.155 கோடி ஊழலில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஊழலில் 19 பேருக்குத் தொடா்புள்ளது தெரிய வந்துள்ளது என்றாா் அவா்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் அச்சன் நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பதியில் உள்ள ஜோதிராவ் பூலே சிலை அருகில், அக்கட்சி நிா்வாகி சுகுணம்மா தலைமையில்

அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை மதியம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அச்சன் நாயுடுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவா்கள் முழக்கம் எழுப்பினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT