இந்தியா

உலகளவில் கரோனா பாதிப்பு: 4-ஆம் இடத்தில் இந்தியா

11th Jun 2020 09:37 PM

ADVERTISEMENT


உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் இந்தியா 4-ஆம் இடத்தை அடைந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக, நாள்தோறும் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

வோல்டோமீட்டர் தரவுகளின்படி, இந்தியாவில் 2,97,001 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8,321 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 1,46,074 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக, உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா தற்போது 4-ஆம் இடத்தை அடைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவுக்கு அடுத்தபடியாக 2.91 லட்சம் பாதிப்புகளுடன் பிரிட்டன் 5-ஆம் இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் இன்றைய (வியாழக்கிழமை) சமீபத்திய அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரப்படி புதிதாக 9,996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 357 பேர் பலியாகியுள்ளனர்.

தரவுகள்: வோல்டோமீட்டர்

  நாடு பாதிப்பு பலி குணமடைந்தோர்
1. அமெரிக்கா 20,71,067 1,15,266 8,08,556
2. பிரேசில் 7,75,581 39,803 3,96,692
3. ரஷியா 5,02,436 6,532 2,61,150
4. இந்தியா 2,97,001 8,321 1,46,074
5. பிரிட்டன் 2,91,409 41,279 -
உலகம்  75,14,862 4,20,316 38,10,713

 

Tags : இந்தியா Corona virus coronavirus கரோனா வைரஸ் கரோனா Corona கரோனா பாதிப்பு COVID 19 India Corona கரோனா தொற்று இந்தியா கரோனா Corona India covid 19 india World corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT