இந்தியா

உ.பி. அலட்சியம்: தவறான பரிசோதனை முடிவால் கரோனா வார்டில் தங்கவைக்கப்பட்ட 35 பேர் 

11th Jun 2020 03:48 PM

ADVERTISEMENT


நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், தனியார் பரிசோதனை ஆய்வகத்தின் அலட்சியத்தால் 35 பேர் கரோனா தொற்று இருப்பதாகக் கூறப்பட்டு கரோனா வார்டில் தங்கவைக்கப்பட்ட கொடூரம் நடந்தேறியுள்ளது.

இந்த சம்பவத்தில் தனியார் பரிசோதனை ஆய்வகத்துக்கு கௌதம் புத்தா நகர் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது, காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னை இருந்த 35  பேர் தனியார் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களை கரோனா பரிசோதனை செய்யுமாறு மருத்துவக் கூற, அவர்கள் தனியார் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். அனைவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியானதை அடுத்து, அனைவரும் அரசு தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிக்கலாம்.. சென்னையில் பாதுகாப்பான இடமாக இருக்கும் ஒரே மண்டலம் மணலி

ADVERTISEMENT

அங்கு, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மாதிரிகள் தேசிய தொற்றுதொய் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அவர்களுக்கு கரோனா இல்லை என்பது தெரிய வந்தது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு, அனைவரும் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்து தனியாக கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

பரிசோதனை முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டது குறித்து விசாரித்ததில், பரிசோதனைக்காக தனியார் பரிசோதனை ஆய்வகங்களில் மாதிரிகளை சேகரித்து, அதனை உரிய வெப்பநிலையில் ஊழியர்கள் பராமரிக்கத் தவறிவிட்டனர். இதனால், அவர்களாகவே பரிசோதனை முடிவுகளை பதிவு செய்து கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல மூன்று ஆய்வகங்கள் அரசு வெளியிடும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், அனுமதி பெறாமலேயே பணத்துக்காக சில ஆய்வகங்கள் செயல்படுவதும், இங்கு ஒருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.4,500 முதல் 5,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
 

Tags : UP உத்தரப்பிரதேசம் கரோனா தொற்று தனியார் மருத்துவமனை private lab நொய்டா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT