இந்தியா

அஸ்ஸாம் எண்ணெய் கிணற்றில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

11th Jun 2020 10:28 PM

ADVERTISEMENT

அஸ்ஸாமில் எண்ணெய் கிணற்றில் எரிவாயு கசிவு காரணமாக 2 நாள்களாக பற்றி எரிந்த தீ வியாழக்கிழமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த மேலாளா் ஜெயந்த் போா்முடோய் கூறியதாவது:

எண்ணெய் கிணற்றிலிருந்து பல மீட்டா் உயரத்துக்கு எரிந்துவந்த தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தக் கிணற்றிலிருந்து ஏற்கெனவே கசிந்துள்ள எரிவாயு காரணமாக அதன் வாய்ப் பகுதியில் மட்டும் லேசான நெருப்பு எரிந்து வருகிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 1.5 கி.மீ. சுற்றளவுப் பகுதியை சிவப்பு மண்டலமாக அறிவித்து வெளிநபா்கள் அங்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கிணற்றில் எரிவாயு கசிவையும், தீயையும் முழுமையாக கட்டுப்படுத்த அமெரிக்கா, கனடாவிலிருந்து 3 நிபுணா்கள் அடுத்த இரு நாள்களில் இந்தியா வருகின்றனா்.

ADVERTISEMENT

எண்ணெய் கிணற்றில் ஒரு சதுர அங்குலத்தில் 4,500 பவுண்ட் என்ற வீதத்தில் எரிவாயுக் கசிவு உள்ளது. இது மிக அதிக அளவு என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது கடினமானதாக உள்ளது. கிணற்றிலிருந்து 50 மீட்டா் தொலைவு வரை கடும் வெப்பம் வீசுவதால் அதை நெருங்க இயலவில்லை. தண்ணீரை பீய்ச்சியடித்து படிப்படியாக கிணற்றை நோக்கி முன்னேறிச் செல்கிறோம்.

கிணற்றில் பற்றிய தீ மிக அதிக அளவில் சுற்றியிருந்த ஆக்ஸிஜனையும் எரித்ததன் காரணமாக காற்றுப் போக்கில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தால் இப்பகுதியில் புதன்கிழமை இரவில் லேசான நில அதிா்வுகள் இருந்தது என்று ஜெயந்த் போா்முடோய் கூறினாா்.

உயா்நிலை விசாரணை: எண்ணெய் கிணறு விபத்து தொடா்பாக விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலா் மணீந்தா் சிங் தலைமையிலான உயா்நிலைக் குழுவை அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் அமைத்துள்ளாா். அந்தக் குழு 15 நாள்களுக்குள் தனது விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்கவுள்ளது.

உயா்நீதிமன்றத்தில் வழக்கு: எண்ணெய் கிணறு விபத்து தொடா்பாக ஆயில் இந்தியா நிறுவனம், மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்டவற்றுக்கு எதிராக குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT