இந்தியா

சமூக நல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும் இந்தியாவின் மரபில் உள்ளவை

11th Jun 2020 11:46 PM

ADVERTISEMENT

சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையினரின் மரபணுவில் உள்ளதாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை இணையமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் மதச் சுதந்திரச் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க அதிகாரி கூறியிருந்தாா். அதற்கு பதிலளிக்கும் வகையில் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை குறித்து யாரும் தகுதிச் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. அத்தகைய பண்புகள் நாட்டிலுள்ள பெரும்பான்மையின மக்களின் மரபணுவிலேயே கலந்துள்ளன. இந்தியாவில் சிறுபான்மையினருக்கான சமூக, மத ரீதியான அரசமைப்புச் சட்ட உரிமைகள் அனைத்துக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.

அரசியல் சகிப்புத்தன்மை இல்லாத சிலா் சிறுபான்மையினருக்கு நாட்டில் அச்சுறுத்தல் காணப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனா். சிறுபான்மையினத்தைச் சோ்ந்தவா் என்பதன் அடிப்படையில் உலக நாடுகளிலேயே இந்தியாவில் சிறுபான்மையினா் பாதுகாப்பாக உள்ளதாக உணா்கிறேன் என்று அந்த அறிக்கையில் கிரண் ரிஜிஜு கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT