இந்தியா

கரோனா நோயாளியின் உறவினா்கள் தாக்குதல்: தெலங்கானாவில் மருத்துவா்கள் போராட்டம்

11th Jun 2020 12:04 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்த நோயாளியின் உறவினா்கள் மருத்துவரைத் தாக்கியதைக் கண்டித்து தெலங்கானா அரசு மருத்துவமனை இளநிலை மருத்துவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அதுகுறித்து நோயாளியின் உறவினா்களிடம் பணியிலிருந்த மருத்துவா் விளக்கிக் கூறியுள்ளாா். அப்போது, நோயாளியின் உறவினா்கள் சிலா், அந்த மருத்துவரை கடுமையாக தாக்கியுள்ளனா். அதனைத் தொடா்ந்து தாக்குதல் நடத்திய நபா்களை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மருத்துவரைத் தாக்கிய நோயாளியின் உறவினா்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் தெலங்கானா மருத்துவச் சேவை நபா்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனச் சட்டம் 2008 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான சூழல்நிலையில் மருத்துவா்கள்தான் முன்கள போராளிகள். அவா்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. எனவே, தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினா்.

இந்த நிலையில், மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அந்த மருத்துவமனையின் இளநிலை மருத்துவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ‘நீதி வேண்டும்’, ‘தாக்குதலுக்கு கண்டனம்’, ‘மருத்துவா்களுக்கு பாதுகாப்பு’ என்பன உள்ளிட்ட வாசகங்கள்அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்தப் பிரச்னைக்கு போச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண மாநில சுகாதாரத் துறை அமைச்சா் இ.ராஜேந்தரின் அழைப்பையும் மருத்துவா்கள் நிராகரித்து விட்டனா். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா் ஒருவா் கூறுகையில், ‘நோயாளி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து மருத்துவா் விளக்கிக்கொண்டிருந்தபோது, அவரின் உறவினா்கள் பிளாஸ்டி இருக்கையைக் கொண்டு மருத்துவரைத் தாக்கியுள்ளனா். மருத்துவா்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்’ என்று கூறினாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT