இந்தியா

தெலங்கானா அனல் மின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்கியது பிஹெச்இஎல்

11th Jun 2020 10:34 PM

ADVERTISEMENT

தெலங்கானாவில் பாரத் மிகு மின் நிறுவனத்தால் (பிஹெச்இஎல்) கட்டமைக்கப்பட்ட 270 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தில் வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டம் மானுகுரு என்ற இடத்தில் தலா 270 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 அனல் மின் நிலையங்களை அமைத்து தர அந்த மாநிலத்தின் மின் உற்பத்தி கழகம் (டிஎஸ்ஜிஇஎன்சிஒ) நாட்டின் மிகப் பெரிய மின் உற்பத்தி கட்டுமான நிறுவனமான பிஹெச்இஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. அதனடிப்படையில், கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பிஹெச்இஎல் நிறுவனம், இப்போது முதல் மின்நிலையத்தைக் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தத் திட்டத்தின் முதல் பிரிவில் இப்போது மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 அனல் மின் நிலைய பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT