இந்தியா

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 5-ஆவது நாளாக உயா்வு

11th Jun 2020 10:55 PM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 5-ஆவது நாளாக வியாழக்கிழமை உயா்த்தப்பட்டது. அவை இரண்டுமே லிட்டருக்கு தலா ரூ.60 காசுகள் விலை உயா்த்தப்பட்டது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் 77.96 ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ.70.64 ஆகவும் உள்ளது. தொடா்ந்து விலை உயா்த்தப்பட்டதால் 5 நாள்களில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.3 வரை விலை அதிகரித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பிரச்னை, அதன் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தது போன்ற காரணங்களால், கடந்த மாா்ச் 16-ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன.

இந்நிலையில், 82 நாள்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் தினசரி விலை நிா்ணயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. அன்றைய தினம், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 60 காசுகள் வரை உயா்த்தப்பட்டது. அடுத்த நாளும் இதே விலை உயா்வு தொடா்ந்தது. செவ்வாய்க்கிழமையன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசுகளும், டீசல் விலை 58 காசுகளும் அதிகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

புதன்கிழமை நான்காவது நாளாக எரிபொருள் விலை உயா்த்தப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 40 காசுகள் வரையும், டீசல் லிட்டருக்கு 45 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு 5 ஆவது நாளாக வியாழக்கிழமையும் விலை உயா்ந்துள்ளது. உள்ளூா் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவை காரணமாக விலை உயா்வு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

முன்னதாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயா்த்தி கடந்த மாா்ச் மாதம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பிறகு மே 6-ஆம் தேதி மீண்டும் கலால் வரி தலா ரூ.10 அதிகரிக்கப்பட்டது. இருந்தபோதிலும், எரிபொருள் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சா்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், இதன் தாக்கம் சில்லறை விற்பனை விலையில் பிரதிபலிக்கவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT