இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் சுட்டுக் கொலை

11th Jun 2020 12:02 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மற்றும் கத்துவா மாவட்டங்களில் உள்ள மஞ்சகோட், கெரி, பாலகோட் மற்றும் கரோல் மைத்ரான் ஆகிய பகுதிகளில் சிறிய மற்றும் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

புதன்கிழமை இரவு 10 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. பதுங்கு குழியில் கிராம மக்கள் பதுங்கும் நிலை ஏற்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. சிறிது நேரம் நடைபெற்ற இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Indian Army Rajouri Pakistan ceasefire violation ஜம்மு காஷ்மீர் ரஜோரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT