இந்தியா

கர்நாடகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை: அமைச்சர் அறிவிப்பு

11th Jun 2020 03:35 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் 7-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு பற்றி மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தி ஜூலை மாதம் திறக்க முடிவு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பல மாநிலங்களில தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. 

ADVERTISEMENT

இதையடுத்து, கர்நாடகத்தில் 7-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறுகையில், 'ஆன்லைன் வகுப்புகள்  என்பது பள்ளிகளுக்குச் சென்று படிப்பதற்கு ஈடாகாது. மேலும், அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளைப் பெறுவதற்கு தொழில்நுட்ப வசதிகள் இருக்காது. எனவேதான் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். 

மேலும், ஜூலை 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக கர்நாடக மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : ஆன்லைன் வகுப்பு online classes கர்நாடகா lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT