இந்தியா

ஏழாம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்த தடை: கர்நாடக அரசு

11th Jun 2020 03:26 PM

ADVERTISEMENT


ஏழாம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்த பள்ளிகளுக்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தனியார் பள்ளிகள், மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த தடை விதித்திருந்தது. இவ்வாறு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவது மாணவ, மாணவிகளின் மன நலனை பாதிக்கும் என்றும் கர்நாடக துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

அதே சமயம், ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதற்காக, பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடையை தற்போது 7-ம் வகுப்பு வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Karnataka 7th standard bans online classe கர்நாடகம் கர்நாடக அரசு ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை ஏழாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்குத் தடை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT