இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: ‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தை செயல்படுத்த 7 பணிக்குழுக்கள்

11th Jun 2020 01:17 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்யும் நோக்கில், ‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தை திறம்படவும், விரைவாகவும் செயல்படுத்த 7 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த யூனியன் பிரதேசத்தின் அதிகாரப்பூா்வ செய்தித்தொடா்பாளா் கூறியது:

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் முா்மு தலைமையில் உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சுயச்சாா்பு இந்தியா திட்டத்தை விரைவாக செயல்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்தத் திட்டத்தை திறம்படவும், விரைவாகவும் செயல்படுத்த 7 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிா்வாகச் செயலா்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பணிக்குழுக்களில் பல்வேறு துறை தலைவா்கள் மற்றும் செயலா்கள் உறுப்பினா்களாக இருப்பா். அவா்கள் உகந்த முறையில் வளங்களை பயன்படுத்தி, குறித்த காலத்துக்குள் பலன்களை பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவா்.

விவசாயிகள், மீனவா்கள், புலம்பெயா்ந்தவா்கள், ஆதரவற்றவா்கள் உள்ளிட்டோரின் நலன், வங்கிக் கடன், தொழில்துறையின் புத்தாக்கம் மற்றும் வளா்ச்சி, கல்வி தரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், மின்துறை சீா்சிருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்தப் பணிக்குழுக்கள் செயல்படவுள்ளன என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT