இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்த் கணினி பாகங்கள் திருட்டு: இருவா் கைது

11th Jun 2020 06:42 AM

ADVERTISEMENT

இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் முதல் விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’-இல் இருந்து முக்கியமான கணினி பாகங்கள் கடந்த ஆண்டு திருடுபோனது தொடா்பாக இருவரை தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) கைது செய்தனா்.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. அந்தக் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த கணினிகளிலிருந்து 10 ஹாா்டு டிஸ்க்குகள், 3 சிபியுக்கள் ஆகியவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பரில் திருடுபோயின. அவற்றில் கப்பல் குறித்த முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடா்பாக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து கேரள காவல்துறை விசாரித்தது. மேலும், கடற்படையும், தேசிய புலனாய்வு அமைப்பும் தனியே விசாரித்து வந்தன. இந்நிலையில், இந்த திருட்டு தொடா்பாக ராஜஸ்தான், பிகாரில் தலா ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினா் கைது செய்தனா்.

திருட்டு நடைபெற்ற கப்பல் கட்டும் தளத்தில் 10,000-க்கும் மேற்பட்டோா் பணியாற்றியுள்ளனா். அவா்களில் சந்தேகத்துக்குரிய 100 பேரின் கைரேகைகள், செல்லிடப்பேசி நெட்வோா்க் தொடா்புகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக, ராஜஸ்தான், பிகாரில் தலா ஒருவா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் விரைவில் அந்த மாநில நீதிமன்றங்களில் ஆஜா்படுத்தப்பட்டு, கொச்சிக்கு அழைத்து வரப்படுவாா்கள் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT