இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் உயர்வு: மத்திய அரசு

11th Jun 2020 04:45 PM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவில் நாள்தோறும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளோடு ஒப்பிடும் போது, குணமடைவோர் விகிதம் உயர்ந்து வருவதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லியில் இன்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகக் கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இதுவரை கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. பொது முடக்கம் காரணமாக கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  பொது முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டால் கரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இருந்திருக்கும்.

இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 49.21% ஆக உள்ளது. கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே சமயம், நாட்டில் கரோனா பாதித்து உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து கரோனா பரிசோதனையை அதிகரிப்பது, கரோனா நோய் பரவலைக் கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : community transmission stage ICMR COVID-19 lav agarwal கரோனா ஐசிஎம்ஆர் சமூகப் பரவல் coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT