இந்தியா

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,86,579-ஆக உயர்வு

11th Jun 2020 10:07 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,579-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பட்ட நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு 5ஆவது முறையாக ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 9,996 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,76,583-லிருந்து 2,86,579-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 357 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 7,745-லிருந்து 8,102-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206-லிருந்து 1,41,029-ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 94,041 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : India Maharastra coronavirus கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT