இந்தியா

உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை: 2-வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம்

11th Jun 2020 03:06 PM

ADVERTISEMENT

உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதில், சென்னை ஐஐடி முதலிடத்தையும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாவது இடத்தையும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி கடந்த ஆண்டும் முதலிடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டும் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தேசிய அளவிலான கல்வி மையங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற சுமார் 5,805 கல்வி மையங்களில் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

சுட்டுரையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இந்த பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு கல்லூரியும் கற்பித்தல், கற்றல் வளம், கற்பிப்போரின் வளம், ஆராய்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் கல்வி மையத்தில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை என சுமார் 9 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான பட்டியலைக் கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

Tags : முதலிடம் சென்னை ஐஐடி Ramesh Pokhriyal Indian Institute of Technology சென்னை ஐஐடி முதலிடம் இரண்டாவது ஆண்டாக முதலிடம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT