இந்தியா

நாயின் வாயில் டேப் சுற்றிக் கொடுமை: கேரளத்தில் மேலும் ஒரு சம்பவம்!

11th Jun 2020 01:08 PM

ADVERTISEMENT

 

திருச்சூர் மாவட்டத்தில் நாயின் வாயில் கடந்த 2 வாரங்களாக டேபை சுற்றிக் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் கேரளத்தில் 2 யானைகள் கொல்லப்பட்டனர். அதில், தேங்காயில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும், வடக்கு நிலம்பூர் வனப்பகுதியில் யானை பலத்த காயம் அடைந்ததை அடுத்து மற்றொரு யானை மலப்புரத்தில் இறந்தது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பு, திருச்சூரில் மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்: கொடூரத்தின் உச்சம் - அன்னாசிப் பழத்துக்குள் வெடிமருந்து; வலியால் துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி யானை!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் ஒல்லூரில் ஒரு வீட்டில் உள்ள நாயின் வாயில் கடந்த இரண்டு வாரங்களாக டேப்பினால் சுற்றி ஒரு சிலர் கொடுமைப்படுத்தியுள்ளனர். 

கடந்த இரண்டு வாரங்களாக உணவு இல்லாமல், அவதியடைந்து வந்தது அந்த நாய். இதனையடுத்து, விலங்குகள் நல ஆர்வலர்களுக்குத் தகவல் கிடைத்ததும், நாயைத் தேடி அலைந்து சம்பவ இடத்திற்கு வந்து நாயினை மீட்டனர்.

பின்னர், அதன் வாயில் அடுக்கடுக்காக சுற்றப்பட்டிருந்த டேப்பினை அகற்றினர். நாயினை விலங்கு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

Tags : kerala கேரளா dog Thrissur நாய் Animal Welfare Services திருச்சூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT