இந்தியா

உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

11th Jun 2020 01:49 PM

ADVERTISEMENT

 

கரோனா நெருக்கடி நிலையை இந்தியாவுக்கான ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கரோனா வைரஸ் நெருக்கடி நிலையாக ஒரு வாய்ப்பாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். நாட்டின் ஒரு முக்கிய திருப்புமுனையாக 'தன்னம்பிக்கை இந்தியா'வாக இதனை நாம் மாற்ற வேண்டும். 

ADVERTISEMENT

நாம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த முன்வர வேண்டும். பிற நாடுகளில் இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 

கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய வர்த்தக சபை பெரும் பங்களிப்பை அளித்தது. குறிப்பாக உற்பத்தித் துறையை ஆதரித்தது. 

மூங்கில் மற்றும் வேளாண் பொருள்கள் உற்பத்தி மூலமாக வடகிழக்கு இந்தியா  ஒரு முக்கிய மையமாக மாறும்.

உலக நாடுகளைப் போல கரோனா வைரஸுடன் இந்தியாவும் போரிடுகிறது. மேலும் பல பிரச்னைகளும் உள்ளன. அனைத்தையும் தைரியத்துடன் எதிர்கொள்வோம்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வலுப்படுத்த இறக்குமதியில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்தி, சோலார் பேனல்கள், பேட்டரிகள், சிப் உற்பத்தி மற்றும் விமான போக்குவரத்து ஆகியவற்றில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது' என்று பேசினார்.

Tags : PM Narendra Modi coronavirus கரோனா வைரஸ் கரோனா கரோனா வைரஸ் தொற்று
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT