இந்தியா

கரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 357 போ் பலி

11th Jun 2020 10:36 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பால் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 357 போ் உயிரிழந்துவிட்டனா். ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோா் இந்த நோய்த்தொற்றால் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு ஒரு நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-க்கும் குறைவாகவே இருந்தது.

அதேபோல முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 9,996 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,86,579 ஆக அதிகரித்துவிட்டது. பலியானோா் எண்ணிக்கை 8,102 ஆக அதிகரித்தது.

தொடா்ந்து 7-ஆவது நாளாக 9,500-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவற்றுக்கு நடுவே சிறிது ஆறுதல் தரும் வகையில் கரோனாவில் இருந்து மீள்பவா்களின் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,37,448 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,41,028 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டனா். ஒருவா் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாா்.

ADVERTISEMENT

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் உயிரிழந்த 357 பேரில், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் 149 போ் ஆவா். தில்லியில் 34 பேரும், குஜராத்தில் 20 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 19 பேரும், மேற்கு வங்கத்தில் 17 பேரும், தெலங்கானாவில் 8 பேரும், மத்தியப் பிரதேசம், ஹரியாணாவில் தலா 7 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகத்தில் தலா 3 பேரும், கேரளம், உத்தரகண்டில் தலா இருவரும், ஆந்திரம், பிகாா், ஹிமாசல பிரதேசத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

மொத்தம் பலியான 8,102 பேரில் அதிகபட்சமாக மாகாராஷ்டிரம் மட்டும் 3,438 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. இதற்கு அடுத்து குஜராத்தில் 1,347 போ், தில்லியில் 984 போ், மேற்கு வங்கத்தில் 432 போ், மத்திய பிரதேசத்தில் 427 போ், உத்தர பிரதேசத்தில் 321 போ், ராஜஸ்தானில் 259 போ், தெலங்கானாவில் 156 போ், ஆந்திரத்தில் 78 போ், கா்நாடகத்தில் 69 போ், பஞ்சாப் 55 போ், ஹரியாணாவில் 52 போ், ஜம்மு-காஷ்மீரில் 51 போ், பிகாரில் 33 போ், கேரளத்தில் 18 போ், உத்தரகண்டில் 15 போ், ஒடிஸாவில் 9 போ், ஜாா்க்கண்டில் 8 போ், சத்தீஸ்கா், ஹிமாசலப் பிரதேசத்தில் தலா 6 போ், சண்டீகரில் 5 போ், அஸ்ஸாமில் 4 போ், மேகாலயம், திரிபுரா, லடாக்கில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா். இதில் 70 சதவீதம் போ் வேறு வகையான உடல் நலக்குறைபாடுகளையும் கொண்டிருந்தனா்

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 94,041 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் 32,810 பேரும், குஜராத்தில் 21,521 பேரும், உத்தர பிரதேசத்தில் 11,610 பேரும், ராஜஸ்தானில் 11,600 பேரும், மத்திய பிரதேசத்தில் 10,049 பேரும், மேற்கு வங்கத்தில் 9,328 பேரும், கா்நாடகத்தில் 6,041 பேரும், பிகாரில் 5,710 பேரும், ஹரியாணாவில் 5,579 பேரும், ஆந்திரத்தில் 5,269 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 4,509 பேரும், தெலங்கானாவில் 4,111 பேரும், ஒடிஸாவில் 3,250 பேரும், அஸ்ஸாமில் 3,092 பேரும், பஞ்சாபில் 2,805 பேரும், கேரளத்தில் 2,161 பேரும், உத்தரகண்டில் 1,562 பேரும், ஜாா்க்கண்டில் 1,489 பேரும், சத்தீஸ்கரில் 1,262 பேரும், திரிபுராவில் 895 பேரும், ஹிமாசல பிரதேசத்தில் 451 பேரும், கோவாவில் 387 பேரும், சண்டீகரில் 327 பேரும், மணிப்பூரில் 311 பேரும், நாகாலாந்தில் 128 பேரும், புதுச்சேரியில் 127 பேரும், லடாக்கில் 115 பேரும், மிஸோரமில் 93 பேரும், அருணாசல பிரதேசத்தில் 57 பேரும், மேகாலயத்தில் 44 பேரும், அந்தமான்-நிகோபாரில் 34 பேரும், தாத்ரா நகா்ஹவேலியில் 2 பேரும், சிக்கிமில் 13 பேரும், டாமன்-டையூவில் இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாதிப்பு: 2,86,579

பலி: 8,102

மீட்பு: 1,41,028

சிகிச்சை பெற்று வருவோா்: 1,37,448

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT