இந்தியா

புத்தடியில் இன்று ஏலக்காய் வர்த்தகம் ரத்து

11th Jun 2020 09:37 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறும்.

போடியில், சி.பி.எம்.சி., ஏல நிறுவனம் மூலம் புதன்கிழமை நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில், மொத்தம் 52.91 டன் ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதில், சராசரி தரம் கிலோ ரூ.1,658.31-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,377க்கும் விற்பனையானது. 

ADVERTISEMENT

இந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை), புத்தடியில் சி.பி.ஏ., ஏல நிறுவனம் சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக வர்த்தகம் ரத்து செய்யப்படுவதாக சி.பி.ஏ., ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT