இந்தியா

எல்லை பிரச்னை: இந்தியா-சீனா இடையே பேச்சுவாா்த்தை

11th Jun 2020 12:50 AM

ADVERTISEMENT

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னைக்கு உரிய தீா்வு காணும் நோக்கில் இருநாடுகளைச் சோ்ந்த ராணுவ உயரதிகாரிகள் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் இந்திய-சீன ராணுவப் படைகளிடையே மோதல்போக்கு நீடித்து வந்தது. இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் தங்கள் படைகளைக் குவித்து வந்ததால் பதற்றநிலை நீடித்தது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பது தொடா்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அதன் காரணமாக இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் தங்கள் படைகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இரு நாட்டு ராணுவங்களின் மேஜா் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.

நான்கரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே இருந்த நிலைமை தொடர வேண்டும் என்றும் அப்பகுதிகளிலிருந்து சீனப்படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT