இந்தியா

கரோனா பரவலுக்கு காரணம்: சீன அதிபர் மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு

11th Jun 2020 05:59 PM

ADVERTISEMENT

 

பெட்டயா: கரோனா பரவலுக்கு காரணம் என்று கூறி, சீன அதிபர் ஜி சின்பிங் மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிகார் மாநிலம் சம்பரான் மாவட்டம் பெட்டயாவில் உள்ள  முதன்மை குற்றவியல் நீதிபதி முன்னிலையில், வழக்கறிஞர் முராத் அலி என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில் சீனாவின் வுஹான் மாகணத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கரோனா வைரசை உலகம் முழுவதும் பரப்பியதாக சீன அதிபர் ஜி சின்பிங் மீதும்,  அதன் பரவல் குறித்த குறித்த தகவலை உலகிற்குத் தெரியாமல் மறைத்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் கிப்ரேசியஸ் மீதும் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் அவர் தனது புகாருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய் பிரதமர் மோடியை சாட்சியாக சேர்த்துள்ளார். ஜி சின்பிங் மற்றும் கிப்ரேசியஸ் ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 269, 270, 271, 302, 307, 500, 504 மற்றும் 120B இன் படி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

தனது புகாருக்கு ஆதராமாக அனைத்துவகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவானது வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது

Tags : chinese president corona virus case agaisnt xi jinping bihar court கரோனா வைரஸ் சீன அதிபர் ஜின்பிங் பீகார் நீதிமன்றம் வழக்குபதிவு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT