இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 135 பேருக்கு கரோனா: பாதிப்பு 4,261-ஐ எட்டியது!

11th Jun 2020 03:10 PM

ADVERTISEMENT

 

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 135 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,261 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு 1,641 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 65 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 2,540 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும், கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஒருவரும், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,996 பேருக்கு  கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,86,579 ஆக அதிகரித்துள்ளது. இதில், 1,37,448 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நோய்க்கு 8,102 பேர் இறந்துள்ளனர். மேலும், 1,41,028 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : கரோனா Corona தொற்று
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT