இந்தியா

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 ஊழியர்களுக்கு கரோனா

11th Jun 2020 03:55 PM

ADVERTISEMENT

 

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐந்து ஊழியர்களுக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், புவனேஸ்வரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தொடர்பிலிருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது. 

Tags : AIIMS corona positive புவனேஸ்வர் கரோனா தொற்று
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT