இந்தியா

ராஜஸ்தானில் மேலும் 5 பேர் பலி: 12 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு

11th Jun 2020 01:43 PM

ADVERTISEMENT

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் ஐந்து பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் இதுவரை மொத்த உயிரிழப்பு 51 ஆக உயர்ந்துள்ளது.

உலகையை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு நாளுக்கு நாள் பலியும், பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், வியாழக்கிழமை நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,651 ஆக  உயர்ந்துள்ளது என்று அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தற்போது 2,791 பேர் கரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8,596 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,996 பேருக்கு  கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,86,579 ஆக அதிகரித்துள்ளது. இதில், 1,37,448 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 1,41,029 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : rajasthan covid-19 ராஜஸ்தான் கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT