இந்தியா

சென்னையில் அரசு காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கரோனா: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

11th Jun 2020 04:09 PM

ADVERTISEMENT


புது தில்லி: சென்னையில் உள்ள அரசு காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் 35 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 35 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், அரசுக் காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், கிருஷ்ண முராரி, எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு எவ்வாறு தொற்று பரவியது என்றும், இது பற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசு சரியாகப் பின்பற்றவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பக வார்டனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : SC takes suo moto govt-run home 35 children Supreme Court உச்ச நீதிமன்றம் கரோனா வைரஸ் அரசு காப்பகம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT