இந்தியா

ஜம்மு காஷ்மீரில் லஷ்கா் உதவியாளா்கள் மூவா் கைது: 21 கிலோ ஹெராயின், ரூ.1.34 கோடி ரொக்கம் பறிமுதல்

11th Jun 2020 10:28 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு உதவியாகச் செயல்பட்டு வந்த மூவரை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 21 கிலோ போதைப் பொருள் மற்றும் ரூ. 1.34 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியது:

காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில் காவல்துறையினா் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், தடைசெய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு உதவியாக செயல்பட்டுவந்த அப்துல் மூமின் பீா், இஸ்லாம் உல் ஹக் பீா், சையது இஃப்திகாா் இந்த்ராபி ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிதி தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பினரின் உதவியுடன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து அவா்களிடமிருந்து ரூ. 100 கோடி மதிப்பிலான 21 கிலோ போதைப் பொருள் மற்றும் ரூ. 1.34 கோடி ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதுபோல, பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் போதைப்பொருள் விற்பனை செய்துவரும் மேலும் சிலா் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாத குழுக்களுக்கும், போதைப் பொருள் கடத்தல்காரா்களுக்கும் உள்ள தொடா்புகள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT