இந்தியா

டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

10th Jun 2020 01:53 PM

ADVERTISEMENT

 

வெகு நேரம் டிவி பார்த்த மகனை தாய் கண்டித்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டம் பிப்வேவாதி பகுதியில் உள்ள ஆதர்ஷ் சாவலில் சிறுவன், தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தான். 

இந்நிலையில் காலையில் இருந்து சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். இதைக் கவனித்த சிறுவனின் தாய், அவனை கண்டித்து தொலைக்காட்சியை நிறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று துணியால்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான். மேல் தளத்திற்குச் சென்ற சகோதரி இதனை பார்த்து தாயை அழைத்துள்ளார். 

சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT