இந்தியா

புணேவில் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள்; ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உட்பட 6 பேர் கைது

10th Jun 2020 06:51 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்பட கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் முதல், வெளிநாட்டு பணம், புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் என கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தீவிர விசாரணை மேற்கொண்டு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT