இந்தியா

தில்லியில் ஜூன் இறுதியில் கரோனா தொற்று 1 லட்சமாக உயரலாம்: கேஜரிவால்

10th Jun 2020 02:20 PM

ADVERTISEMENT


புது தில்லி: ஜூன் மாத இறுதியில் தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, எனக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோன இல்லை என்று முடிவு வெளியாகியுள்ளது. எனக்காக பிரார்த்தித்த, எனது உடல் நலம் தேற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைநகர் தில்லியில் ஜூன் மாத இறுதியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் அபாயம் உள்ளது.

ADVERTISEMENT

சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிவது போல, ஒற்றை - இரட்டை இலக்க எண்களின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதும் கரோனாவில் இருந்து காக்க உதவும்.

தனியார் மற்றும் தில்லி அரசு மருத்துவமனைகளில் தில்லிவாசிகளுக்கு மட்டுமல்லாமல், பிற மாநில மக்களுக்கும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக தில்லி துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவோம்.

ஜூலை 31ம் தேதி வாக்கில், தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு மட்டும் சுமார் 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படும். நாளை அல்லது நாளை மறுநாள் முதல், நான் நேரடியாக களத்தில் இறங்கி, கரோனா சிகிச்சை தொடர்பான சூழ்நிலைகளை ஆய்வு செய்ய உள்ளேன்.  விளையாட்டரங்கம் போன்றவற்றை கரோனா வார்டுகளாக மாற்றுவது பற்றி ஆராயப்படும்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கரோனாவுக்கு எதிரானப் போரை எதிர்கொள்ள வேண்டும்.

இதர மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் தில்லிக்கு சிகிச்சைக்காக வந்தால், ஜூலை 31-ம் தேதியளவில் கரோனா நோயாளிகளுக்கு மட்டும் 1.5 படுக்கை வசதிகள் தேவைப்படும்.

அரசியல் செய்ய இது நேரமல்ல, அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT