இந்தியா

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவர் பலி

8th Jun 2020 09:45 AM

ADVERTISEMENT

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் பலியானார்கள்.

ஒடிசா மாநிலம், தேன்கனல் மாவட்டத்தில் கங்காதஹாத் பகுதியில் பயிற்சி விமானத்தில் கேப்டன் சஞ்சீப் குமார் உட்பட இருவர் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது அந்த விமானம் எதிர்பாரதவிதமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. 

இதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா மற்றும் பிகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் ஆகியோர் பலியானார்கள். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

ADVERTISEMENT

Tags : aircraft
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT