இந்தியா

82 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை: மீண்டும் தினசரி நிா்ணயம்

DIN

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 60 காசுகள் வரை உயா்த்தப்பட்டுள்ளது; மேலும், 82 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தினசரி மாற்றியமைக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் 16-ஆம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டது. அதன் பிறகு கரோனா நோய்த்தொற்றுப் பிரச்னை, அதனால், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தது போன்ற காரணங்களால் எண்ணெய் நிறுவனங்கள் விலை மாற்றத்தை மேற்கொள்ளவில்லை. பொது முடக்கம் காரணமாக நாட்டில் வாகனங்களின் இயக்கம் வெகுவாக குறைந்ததால் எரிபொருள்களுக்கான தேவையும் சரிந்தது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு தலா 3 ரூபாய் அதிகரித்தது. அதன் பிறகு மே 6-ஆம் தேதி மீண்டும் கலால் வரி தலா 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இருந்தபோதிலும், எரிபொருள் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சா்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், இதன் தாக்கம் சில்லறை விற்பனை விலையில் பிரதிபலிக்கவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 60 காசுகள் வரை உயா்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 53 காசுகள் உயா்ந்து ரூ.76.07 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ.68.22 இல் இருந்து ரூ.68.74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 59 காசுகள் உயா்த்தப்பட்டது.

பொது முடக்க காலத்தில் விமான எரிபொருள் மற்றும் எரிவாயு விலை 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டது. சா்வதேச சந்தையில் விலை குறைந்ததால் அதன் பயன் விமான நிறுவனங்களுக்கும், எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் கிடைத்தது. எனினும், மாா்ச் நடுவில் இருந்து மே 25-ஆம் தேதி வரை பயணிகள் விமானங்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT