இந்தியா

மும்பையில் 50 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

8th Jun 2020 10:15 PM

ADVERTISEMENT


மும்பையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,553 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 109 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 88,528 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 44,374 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

ADVERTISEMENT

மும்பை:

மும்பையில் புதிதாக 1,311 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 50,085 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,702 ஆக உள்ளது.

தாராவி:

தாராவியில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,924 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாள்களாக புதிதாக யாரும் பலியாகாததால் அங்கு பலி எண்ணிக்கை 71 ஆக நீடிக்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT