இந்தியா

மகாராஷ்டிரம்: கரோனா பாதித்த இரண்டு சிறைக்கைதிகள் தப்பியோட்டம்

8th Jun 2020 02:58 PM

ADVERTISEMENT


அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இரண்டு சிறைக் கைதிகள், கரோனா சிறப்பு வார்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு கரோனா சிறப்பு வார்டில் இருந்த ஜன்னல் கம்பிகளை வளைத்து, போர்வைகளை கயிறு போல மாற்றி மாடியில் இருந்து இறங்கித் தப்பிச் சென்றதாக சிறைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைத் துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்சூர் சிறைச்சாலைடியல் இருக்கும் 29 விசாரணைக் கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது சில நாள்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT