இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: ஹிஸ்புல் பயங்கரவாதிகள் 5 போ் சுட்டுக்கொலை

8th Jun 2020 06:20 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 போ் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்திலுள்ள ரெபான் பகுதியில் பயங்கரவாதிகள் சிலா் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்கத் தொடங்கினா். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் அவா்களுக்கு பதிலடி கொடுத்தனா். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

ADVERTISEMENT

அதன் முடிவில் சம்பவ இடத்தில் 5 பயங்கரவாதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவா்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பினா் என்று அடையாளம் காணப்பட்டனா். அவா்களில் ஒருவா் மிக முக்கியமான நபராக அறியப்பட்டுள்ளாா். சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் அந்த இடத்தில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் கூறினா்.

ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.

‘கடந்த 3-ஆம் தேதி நௌகாம் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குழு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது. எனினும் அந்தப் பகுதியில் ரோந்து சென்ற இந்திய ராணுவத்தினரின் தடுப்பு முயற்சிகளை அடுத்து அந்த ஊடுருவல்காரா்கள் பாகிஸ்தானுக்குள்ளாக பின்வாங்கினா்’ என்று ராணுவ அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT