இந்தியா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 9983 பேருக்கு கரோனா பாதிப்பு

8th Jun 2020 11:20 AM

ADVERTISEMENT


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 206 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,983 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,56,611-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தொடா்ந்து 5-ஆவது நாளாக, சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் கரோனாவால் 206 பேர் பலியாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 287 போ் பலியாகினா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய்த்தொற்றால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 7,135 ஆக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,25,381 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,24,095 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 48.37 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா். 

ADVERTISEMENT

பாதிப்பு, இறப்பு குறைவு: உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 17.32 போ் என்ற வீதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது. இது, உலக சராசரியை விட (87.74) மிக குறைவானதாகும். பொதுமுடக்கம் தளா்த்தப்பட்ட ஜொ்மனி (219.93), இத்தாலி (387.33), பிரிட்டன் (419.54), ஸ்பெயின் (515.61) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதிப்பு மிக குறைவாக உள்ளது.

கரோனா உயிரிழப்பை பொருத்தவரை, இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 0.49 போ் என்ற அளவில்தான் உள்ளது. உலக சராசரியைவிட (5.17) இது குறைவாகும். இதேபோல், ஜொ்மனி (10.35), இத்தாலி (55.78), பிரிட்டன் (59.62), ஸ்பெயின் (58.06) ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் உயிரிழப்பு மிக குறைவு என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா நிலவர அறிக்கையை குறிப்பிட்டு, இந்த தகவல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT